விஜய் 65 படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள்!!

0

“தளபதி” ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தளபதி 65 திரைப்படத்திற்கான ஷூட்டிங் இன்று பூஜை போட்டு துவக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பூஜையின் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி 65 திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் ஆண்டிற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே போல் தனது கதையினையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்படியாக இருக்க, கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியாக இருந்த திரைப்படம் தான் “மாஸ்டர்” ஆனால் பொது முடக்கம் காரணமாக அந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் அன்று தான் வெளியானது.

‘பெண்கள் கண்ணியத்திற்கு குறைவாக நான் பேசவில்லை’ – தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்!!

மெகா ஹிட் ஆன அந்த திரைப்படத்தினை அடுத்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தினை “சன் பிக்ச்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் “மாஸ்டர்” திரைப்படத்திற்கு இசை அமைத்த அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார்.

இதனை அடுத்து இன்று படத்திற்கான துவக்கமாக பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே பங்கேற்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்ற நடிகர் கவின் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here