தலைவர் 169 பட டைட்டில் இதுதான் – 15 ஆண்டுகளுக்கு பின் திரும்பும் ரஜினியின் மாஸ் கதாபாத்திரம்!!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 169 படத்தின் டைட்டில் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

நடிகர் ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு ரிலீஸான திரைப்படம்  அண்ணாத்த. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தை அடுத்து, நடிகர் ரஜினி தனது 169 வது படத்தில், இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் படத்தின், டைட்டில் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு “பாஸ்” என்று டைட்டில் பரிந்துரையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான சிவாஜி திரைப்படத்தில், ரஜினி பாஸ் என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து மீண்டும் இதுபோன்ற மாஸான பாத்திரத்தில், நடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here