விட்டதை பிடிக்க வெறியோடு களமிறங்கிய நெல்சன் – அதிரடியாக வெளியான “தலைவர் 169” ரிலீஸ் தேதி!

0
விட்டதை பிடிக்க வெறியோடு களமிறங்கிய நெல்சன் - அதிரடியாக வெளியான "தலைவர் 169" ரிலீஸ் தேதி!

தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் நெல்சன்:

நடிகை நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் போன்ற படங்களை இயக்கத்தின் மூலமாக நெல்சன் திலீப்குமார் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிய நிலையில் மக்களிடையே சில எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, நெல்சன் திலீப்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி நிக்கி திருமணம்.. வைரலாகும் புது மண தம்பதியின் புகைப்படங்கள்!!

அதன்படி, இந்த தலைவர் 169 திரைப்பட ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்து உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here