‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் – போனி கபூருக்கு கோரிக்கை !!

0

வலிமை படத்தின் அப்டேட்  குறித்து ஆவலாக எதிர்பார்த்துவரும் தல அஜித்தின் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம் “மோஷன் போஸ்ட்டரையாவது வெளியிடுங்கள்” என்று கேட்டு ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் “தல”என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் 59வது படமான வலிமை தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்ற வருடம் ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக ஓடியது. இந்த திரைப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக  போனி கபூர் தயாரிப்பில் அஜித் “வலிமை” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இவர் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இந்த மூன்று பெரும் சேர்ந்த வெற்றி கூட்டணி இணைய உள்ளதால் தமிழ் திரை உலகில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் அவரது ரசிகர்கள் இந்த திரைப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங்கில் அஜித் காயமடைந்தார். அதனால் சிறிது இடைவெளி விட்டு தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது.

தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் வெளியீடு குறித்து சென்ற வாரம் தேதி வெளியிட்டது. அதன் படி படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு  வெளியானது.

தற்போது பல முக்கிய நடிகர்களின் படத்தின் அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. விஜயின் மாஸ்டர் மற்றும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனுடன் விஜய் இணையும் புதிய படம்,சூர்யா கெளதம் மேனனுடன் இணையும் வெப் சீரீஸ் ,என்ற புதிய அப்டேட்  தான் அஜித் ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.

அஜித்தின் ரசிகர்களுக்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர், விரைவில் இது தொடர்பான அப்டேட்  உங்களுக்கு தெரிய வரும் என்று கூறினார்.

நயன்தாராவின் அந்த ஆறாவது விரலில் அப்படி என்ன உள்ளது?? வெளியான ரகசியம்!!

இதனால் அஜித்தின் ரசிகர்கள் #ValimaiMotionPoster  என்ற டீவீட்டை டிவீட்டரில் ட்ரெண்டாக்கி  உள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் வலிமை படத்தின் மோஷன் போஸ்ட்டரையாவது வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளதாள் தான் அஜித் ரசிகர்கள் இப்படி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்  என்ற கருதும் ஒரு பக்கம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here