‘த ஈகிள் இஸ் கமிங்’…..,முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் தல தோனி…..,

0
'த ஈகிள் இஸ் கமிங்'.....,முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் தல தோனி.....,
'த ஈகிள் இஸ் கமிங்'.....,முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் தல தோனி.....,

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பலருக்கும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஏனென்றால், பல போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது 5 ஆவது கோப்பையை கைப்பற்றியது. இந்த நிகழ்வு ஒவ்வொரு ரசிகர்களுக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக, ‘தல’ தோனி அந்த வெற்றிக் கோப்பையை பெற்று அதனை அம்பதி ராயுடு கையில் கொடுத்து அழகு பார்த்தது முதல் ரவீந்திர ஜடேஜாவை கட்டி அணைத்து அழுதது வரைக்கும் ஒரே எமோஷனல் மொமெண்ட்டாக அமைந்திருந்தது. இப்படிப்பட்ட சந்தோஷமான சூழலுக்கு மத்தியில் தோனியின் உடல்நலம் குறித்த சில தகவல்கள் ரசிகர்களை சற்று வருத்தமடையச் செய்தது.

‘மன்னா மாமான்னா’….,ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கும் இசை இன்று முதல்….,

அதாவது, இந்த ஆண்டு IPL போட்டிகளில் விளையாடிய தோனிக்கு இடது முழங்காலில் வலி இருந்தது. இந்த வலியுடன் தான் அவர் மொத்த சீசனையும் விளையாடி, கோப்பையை வென்று கொடுத்தார். இப்போது, IPL போட்டிகள் முடிவு பெற்றதால் தோனி தனது முழங்கால் வலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சைக்கு பின் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here