தல அஜித்தின் 61வது படம் பற்றிய புதிய அப்டேட் – இவர்தான் மீண்டும் இயக்க போகிறாரா!!!

0
தல அஜித்தின் 61வது படம் பற்றிய புதிய அப்டேட் - இவர்தான் மீண்டும் இயக்க போகிறாரா!!!
தல அஜித்தின் 61வது படம் பற்றிய புதிய அப்டேட் - இவர்தான் மீண்டும் இயக்க போகிறாரா!!!

தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட் தற்போது பரவி வருகிறது. வலிமை படத்திற்கு பின் அடுத்த படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள அஜித், மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைய உள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை ஹெச். வினோத் தான் இயக்க போகிறாராம். போனி கபூர் படத்தை தயாரிக்க உள்ளார். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸை தயாரிக்க சொல்லி தல கூறியுள்ளாராம்.

தல அஜித்தின் 61வது படம் அப்டேட்…

தல அஜித் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து கொண்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார் மற்றும் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்ட வண்ணம் இருந்தனர். வலிமை அப்டேட்டை இரு சில சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தும் வந்தனர்.

தல அஜித்தின் 61வது படம் அப்டேட்...
தல அஜித்தின் 61வது படம் அப்டேட்…

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் பட குழுவினர் பட அப்டேட்டை தள்ளி வைத்தனர். பின் கடந்த சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் என அப்டேட்களை வெளியிட்டனர். இப்பொழுது வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்புகள் பட காட்சிகள் அனைத்தும் முடிவடைய போகிறதாம். அதன்பின் வலிமி படத்தை அதிகாரபூர்வமாக வெளியிட போவதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தல அஜித்தின் 61வது படத்தினை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. வலிமை படத்திற்கு பின் அடுத்த படத்திற்கு கமிட் ஆக உள்ளார் தல. 61வது படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்க போகிறாராம். படத்தை தயாரிக்க போனி கபூரும் தயாராக உள்ளாராம்.

அஜித் 61 சத்யஜோதி பிலிம்ஸ்
அஜித் 61 சத்யஜோதி பிலிம்ஸ்

ஆனால் அஜித் படத்தை தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸை முடிவு செய்துள்ளாராம். சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்தை வைத்து விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தரைத்தது. விவேகம் படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டதால் உடனே விஸ்வாசம் படத்தை தயாரித்து ஏற்பட்ட நஷ்டத்தை இதன்மூலம் சரி செய்து கொடுத்தாராம் அஜித், எனவே தனது 61வது பட தயாரிப்பினை சத்யஜோதி பிலிம்ஸ்க்கே வாய்ப்பளிக்க உள்ளதாக தல அஜித்தின் நெருங்கிய தரப்பினர் மூலம் தகவல் வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை தயாரித்து வருகிறது. ஒருவேளை மாறன் படத்திற்கு பின் அஜித்தின் படத்தை தயாரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. தலயின் வலிமை படத்திற்காக அவரது ரசிகர்கள் நீண்ட ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here