“இந்த கேரக்டரும் அஜித் தான், அந்த கேரக்டரும் அஜித் தான்” – துணிவு படத்தின் கதையை குழப்பி விட்ட H.வினோத்!!

0
"இந்த கேரக்டரும் அஜித் தான், அந்த கேரக்டரும் அஜித் தான்" - துணிவு படத்தின் கதையை குழப்பி விட்ட H.வினோத்!!

H.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த துணிவு திரைப்படம் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரமோஷனை படக்குழு கடந்த டிசம்பர் 31ம் தேதி மலேசியாவில் வைத்து பிரம்மாண்டமாக வெளியிட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் துணிவு படத்தின் இயக்குனர் வினோத் சில விஷயங்களை ஷேர் செய்துள்ளார். அதாவது இப்படத்தில் அஜித் குமாரை பற்றி பேசும் பொழுது ”ஹீரோவும் அவர் தான் வில்லனும் அவர் தான்” என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது துணிவு படத்தில் பல சுவாரஸ்யங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழம்பெரும் பாடகி திடீர் மறைவு., வீட்டிலேயே உயிர் பிரிந்த சோகம்! முதல்வர் ஆழ்ந்த இரங்கல்!!

இந்நிலையில் துணிவு படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்படம் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here