அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் – கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

0
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அடுத்து நடித்து கொண்டிருக்கும் தல 61 படத்தின் கிளைமாக்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் 61:

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார். அவர் நடித்த சிட்டிசன், மங்காத்தா, வில்லன், விசுவாசம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆந்திராவில் உள்ள Araku Valley என்ற மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கூடிய விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் இணையதளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here