TET தேர்வர்கள் கவனத்திற்கு.., பணி நியமனம் குறித்து வெளியான அதிரடி தகவல்.., முழு விவரம் உள்ளே!!

0
TET தேர்வர்கள் கவனத்திற்கு.., பணி நியமனம் குறித்து வெளியான அதிரடி தகவல்.., முழு விவரம் உள்ளே!!

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் பணிபுரிய TET தேர்வில் தேர்ச்சி அவசியமில்லை என அதிரடியான உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் பணி உயர்வு வேண்டுமென்றால் அதற்கு TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில உயர்மட்ட கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி நடுநிலை பட்டதாரி ஆசிரியர், JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆகிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இறுதியில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்வு அவசியமில்லை என தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளி., கல்வித்துறை இயக்குனர் அதிரடி நடவடிக்கை!!!

அதன் படி இந்த கோரிக்கையை முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர்களிடம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வேலை தமிழக அரசிடம் இருந்து இதற்கு சரியான முடிவு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என ஆசிரியர் சங்க கூட்ட நிர்வாகிகள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here