தமிழக அரசுப் பள்ளி ஆசிரியராக TET தேர்வு மட்டும் போதும்?? அமைச்சர் உத்தரவாதம்!!!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியராக TET தேர்வு மட்டும் போதும்?? அமைச்சர் உத்தரவாதம்!!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியராக TET தேர்வு மட்டும் போதும்?? அமைச்சர் உத்தரவாதம்!!!

தமிழகத்தில் TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு அறிவிக்காததால் பல்லாயிரக்கணக்கானோர் TET தேர்வில் வெற்றி பெற்று காத்திருந்தனர். இந்நிலையில் மற்றொரு போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். உச்சபட்சமாக கடந்த 5 நாட்களாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். பலரும் உணவருந்தாமல் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அடிப்படை சம்பளம் ரூ.26,000க்கு மேல்??? வெளியான அறிவிப்பு!!!

இந்நிலையில் ஆசிரியர்களை நேரில் சந்தித்த அமைச்சர் பொன்முடி, ” TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தரவாதத்தை கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here