ஒரு வாரத்தில் TET-ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் பணி நியமனம்…, உயர் கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
ஒரு வாரத்தில் TET-ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் பணி நியமனம்..., உயர் கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
ஒரு வாரத்தில் TET-ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் பணி நியமனம்..., உயர் கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி என்ற நிலை மாறி, நியமன தேர்வு எழுதி வெற்றி பெற்றோருக்கே பணி என்று கடந்த 2013ம் ஆண்டு முதல் அரசாணை 149-யின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக கட்சி தேர்தல் வாக்குறுதியாக அரசாணை 149-ஐ ரத்து செய்து, TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் பணியை வழங்க உள்ளதாக 177 வது அம்சமாக அறிவித்து இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இந்த 177வது அம்சத்தை அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் TET நியமன தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். இவர்களது இந்த போராட்டத்திற்கு, பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்தனர்.

யாத்தே., ஒரு நைட்டுக்கு இத்தனாயிரமா?.., இளம் காதலியுடன் வயதுக்கு மீறிய செயலை செய்யும் பப்லு!!

இதையடுத்து, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் முடிவில், அரசாணை 149-ஐ ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் ஒரு வாரத்தில் பணி நியமனம் வழங்கவும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here