கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் விராட் கோலி படைத்த சாதனை – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வெற்றியை தனதாக்கி, இதுவரை இல்லாத வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

வரலாற்று சாதனை:

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்திருக்கிறது.  இந்த டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்தோடு மோதிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  மேலும் இந்த மேட்சில் விளையாடிய இந்திய வீரர்  உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார். இறுதியாக இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் மேலும் பெருமை கொள்ளும் விதமாக இந்திய வீரர் கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். 

அதாவது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையை இந்த வெற்றி மூலம் விராட் கோலி பெற்றுள்ளார். இந்த செய்தியை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here