வெற்றிகளை குவிக்கும் ரபெல் நடால்.. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் – சோதனைகளை சாதனைகளாக மாற்றுவாரா?

0
வெற்றிகளை குவிக்கும் ரபெல் நடால்.. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - சோதனைகளை சாதனைகளாக மாற்றுவாரா?
வெற்றிகளை குவிக்கும் ரபெல் நடால்.. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - சோதனைகளை சாதனைகளாக மாற்றுவாரா?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர் வெற்றிகளை குவித்து 3-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஸ்பெயின் வீரர் அசத்தல்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 4-வது நாளில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் சுற்றுக்கான ஆட்டத்தில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 2-6, 6-4, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பாபி போக்னினியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடால் அண்மையில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலியில் நவம்பர் மாதம் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான கார்பின் முகுருஜா, செக்குடியரசின் லின்டா புருக்விர்டோவாவை 6-0, 6-4 என்ற நேர்செட்டில் முகுருஜா வெற்றியை தனதாக்கி கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here