செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு மற்றொரு விருந்து.., சென்னையில் அரங்கேறும் சர்வதேச போட்டி!!!

0
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு மற்றொரு விருந்து.., சென்னையில் அரங்கேறும் சர்வதேச போட்டி!!!
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு மற்றொரு விருந்து.., சென்னையில் அரங்கேறும் சர்வதேச போட்டி!!!

இந்திய வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னையில் நடைபெறும் நிலையில் அதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12 முதல் 18 வரை முதல் முறையாக பெண்கள் டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை தமிழக அரசு ஸ்பான்சர் செய்து நடத்தவுள்ளது. இதற்கு முன்னர் இதே டென்னிஸ் ஸ்டேடியத்தில் கடந்த 1997 முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து பெண்கள் டென்னிஸ் தொடர் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்றும் நாளையும் சென்னை டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் ஒற்றையருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய் சமர்தி, சவ்ஜன்யா பவி செட்டி, ரியா பாட்டியா, லட்சுமி பிரபா, ருதுஜா போசாலி உள்பட 24 பேர் பங்கேற்கிறார்கள். 2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் தொடருக்கு முன்னேறுவார்கள். அதன்படி முதல் தகுதி சுற்றுக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய் சமர்தி, ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here