Sunday, April 18, 2021

‘டெனெட்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி – வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

Must Read

டெனெட் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெனெட் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டெனெட் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான டன்கிர்க் படத்திற்குப் பிறகு நோலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெனெட் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்கங்களில் ரசிகர்கள் பலரும் டெனெட் ரிலீஸ் தேதி குறித்து கேள்வியெழுப்பி வந்ததால் பின்னர் இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இப்படம் ஆக்ஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பட்டையை கிளப்பும் ‘ ரகிட ரகிட ரகிட’ பாடல் – கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

கொரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் டெனெட் திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி டெனெட் வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மற்ற நாடுகளில் வெளியான ஒருவாரம் கழித்து செப்டம்பர் 3 அன்று டெனெட் திரைப்படம் வெளியாகவுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘உங்க அழகான முகத்த இப்படி ஆக்கிட்டாங்களே, ரைசா’ – வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ் சினிமா நடிகையான ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அனைவரும் அதிர்ச்சி அடைவது போல ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். சரும டிரீட்மெண்டுக்காக சென்ற ரைசாவிற்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -