தமிழகத்தில் இந்த துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்., விரைவில் பணி நிரந்தரம்? அரசுக்கு பறந்த கோரிக்கை!!

0
தமிழகத்தில் எந்த துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்., விரைவில் பணி நிரந்தரம்? அரசுக்கு பறந்த கோரிக்கை!!
தமிழகத்தில் இந்த துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்., விரைவில் பணி நிரந்தரம்? அரசுக்கு பறந்த கோரிக்கை!!

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையை கணினி மயமாக்க தமிழக அரசு 2001-02 ம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி கணினியில் பணிபுரிய பணியாளர்களை தற்காலிகமாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், தமிழக அரசு 10 ஆண்டு காலம் வரை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலியாகவே காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து கணினி பணியாளர்கள் 2017 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணி நிரந்தரம் அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

நாட்டுப்புற கலைஞர்களா நீங்கள்.., தமிழக அரசு நடத்தும் நம்ம ஊர் திருவிழா.., பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் இத செய்யுங்க!!

தற்போது 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் 906 பணியாளர்கள் தற்காலிகமாகவே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் விரக்தியில் பணியாளர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் தொடர் விடுப்பு அறப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசாணை 37 ன் படி கணினி பணியாளர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கண்டித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here