13 மாவட்டங்களில் வெப்ப நிலை உயரும் – வானிலை மையம் தகவல்!!!

0

தமிழகத்தில் சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை 5 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

13 மாவட்டங்களில் வெப்ப நிலை உயரும்:

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் கரையை கடந்து போனதன்  விளைவாக; தற்போது தமிழகத்தில் வறண்ட காற்று வீசிவருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்க்கு; வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என்றும்; “சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்”. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பதிவாகும். மேலும் தென்தமிழக கடலோரப் பகுதியில் 28-ம் தேதி; இரவு 11.30 வரை கடல் அலை 3.5 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்பக் கூடும் என்றும் கூறினார்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஒரு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28, 29, 30-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here