ஆந்திர அரசின் அறிவிப்பால் படுகுழியில் தள்ளப்படும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் – முதல்வரை அணுகவுள்ள படக்குழு!!

0

ஆந்திராவில் திரையரங்க கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், தெலுங்கில் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு அறிவிப்பு:

ஆந்திராவில் ஒய் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி நடந்து வருகிறது.  இங்கு, திரையரங்கம் சென்று படம் பார்ப்பது அதிக செலவை ஏற்படுத்துவதாக பேச்சு எழுந்தது. இதனை அடுத்து, ஆந்திர முதல்வர் திரையரங்க கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதாவது, டிக்கெட் விலை 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே இருக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஆனால், தெலுங்கு உலகில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் படம் வருகிற ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அரசின் இந்த கட்டண குறைப்பு திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இவர்கள் அனைவரும் இணைந்து முதல்வரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here