ஐஸ்வர்யாவால் 10 வருடங்களுக்கு வெற்றி கண்ட தனுஷ்.., இதுதான் விட்ட குறை தொட்ட குறைனு சொல்லுவாங்களோ

0

தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். அவர் நடிப்பு மட்டுமின்றி பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அந்த வரிசையில் உன் மேல் ஆச தான், ஒய் திஸ் கொலவெறி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. குறிப்பாக 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் வெளியான ஒரே நாளில் உலக அளவில் வைரல் ஹிட் ஆனது.

இந்த பாடலால் 3 திரைப்படம் அமோக வெற்றியை அடைந்தது. இப்படத்தில் வரும் காதல் காட்சிகளை ரியல் காதல் ஜோடிகள் போன்று நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசனும் நடித்திருப்பார்கள். இதனால் கூடுதலாக இப்படம் பேசப்பட்டது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு 3 திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை ட்ரென்ட் – க்கு கொண்டு வந்த திரைப்படம் 3. இப்படத்தை இயக்கிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா கேரியரில் முதல் முயற்சி இது தான். மேலும் தமிழில் வெற்றி கண்ட இப்படத்தை தெலுங்கில் சில தினங்களுக்கு முன்பு வெளியகியுள்ளது. இந்த திரைப்படம் யாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது படம் வெளியான ஒரே நாளில் ரூ.30 லட்சத்துக்கு மேல் வசூலித்து உள்ளது.

அதுமட்டுமின்றி 150 ஷோக்கள் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதே போல் ரீ-ரிலீஸ் செய்த சிரஞ்சீவியின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான கரன மொகுடு படத்தை விட அதிகமான வசூலை அள்ளி உள்ளது. இந்த சாதனையால் அடுத்து வர இருக்கும் வாத்தி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த 3 படத்தை இயக்கியது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தான். விவாகரத்து பிறகும் அவரால் தனுஷ்க்கு நன்மையே நடந்து வருகிறது. இவங்க திரும்பவும் ஒன்னு சேர்ந்தா நல்லா தான் இருக்கும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here