குடும்ப பெண்களுக்கு ரூ.1000 இல்லை ரூ.1500.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
குடும்ப பெண்களுக்கு ரூ.1000 இல்லை ரூ.1500.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
குடும்ப பெண்களுக்கு ரூ.1000 இல்லை ரூ.1500.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக, திமுக கட்சி மகளிருக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்குதல் உள்ளிட்டவைகளை அறிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த வாக்குறுதிகளை அமல்படுத்தி, சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சி அமைக்க இந்த திட்டங்கள் அனைத்தும் கை கொடுக்கவே, தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் முன்னறிவிப்பு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டி, கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு முன்கூட்டியே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ. 1500-ஐ அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

அந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்த மீனா .., கட்டாயப்படுத்தி செய்ய வச்ச இயக்குனர்.., உண்மையை உடைத்த சம்பவம்!!

மேலும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள், படிக்கும் குழந்தைகளுக்கு உதவி தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000, விவசாயிகளுக்கு நிதி உதவியாக ஆண்டுக்கு ரூ. 20,000 வரையும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 மற்றும் புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here