பிக்பாஸில் திடீரென களமிறங்கிய விஜய் பட வில்லி – ஆட்டம் களகட்ட போகுது!

0

தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 இன்று தொடங்கி இருக்கிறது. இந்த ஷோவில் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை அபிநயாஸ்ரீ போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6:

இந்தியாவில் வாழும் அதிகமான மக்களின் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஒரு வீட்டில் 100 நாட்கள் 18 போட்டியாளர்கள் வைத்து நடத்தப்படுகிறது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெளி உலகத்தில் எந்த வித தொடர்பும் இன்றி இருக்க வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள். தமிழ் போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியும் 5 யை கடந்து ஆறில் அடியெடுத்து இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக களமிறங்கியவர் தான் நடிகை அபிநயாஸ்ரீ. அவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் படமான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் நடிகை அபிநயாஸ்ரீ கலந்து கொள்வது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாக அர்ஜூனா தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here