அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி !!! – அரசு அறிவிப்பு

0
telangana-govt-announced-full-lockdown-for-next-10-days
telangana-govt-announced-full-lockdown-for-next-10-days

அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி !!! – அரசு அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் அமலில் இருக்கும் நிலையில் தற்போது தெலுங்கானா அரசும் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

ஊரடங்கு இருக்கும் நாட்களில் மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், வாகனத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு தெலுங்கானா அரசு வேண்டி கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பதால் அம்மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here