ஜூன் 9 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு…அரசு விடுத்த புதிய அறிவிப்பு!!!

0

தெலுங்கானாவில் ஜூன் 9 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மே 12 முதல் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கை விதித்திருந்தார். சனிக்கிழமை வரை தெலுங்கானாவில் 3,527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37,793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 3,982 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முழு ஊரடங்கை நாளை முதல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்துள்ளது. இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்” பிற்பகல் 1 மணி வரை முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பிற்பகல் 1 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தெலுங்கானா பொது சுகாதாரத் துறை, அரசு விதிகளை மீறி கொரோனா சிகிச்சை அளித்த கிட்டத்தட்ட 10 மருத்துவமனைகளின் மேல் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here