இந்தியாவில் மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இன்று (நவம்பர் 7) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளே.., ஹெல்மெட் போட்டால் பட்டாசு இலவசம்.., வெளியான மாஸ் நியூஸ்!!!
இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெலுங்கானா அரசு மேம்படுத்தி வருகிறது. அதன்படி பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தெலுங்கானா தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.