
தெலுங்கானாவில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று (நவ. 9) ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம் பட்டின பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மற்றும் ஆளும் பிஆர்எஸ் கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
தீபாவளிக்கு இனிப்பு வாங்க போறீங்களா?? உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை…, முழு விவரம் உள்ளே!!
அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கியதில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியதோடு கூடுதல் போலீசார்கள் இப்ராஹிம் பட்டினத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.