
தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருந்தார். அதன்படி 85 சதவீதம் நலத்திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளதாக அண்மையில் தகவல் தெரிவித்தனர். மீதமுள்ளவை விரைவில் முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே வாக்காளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் “ஹைதராபாத் இளைஞர் பிரகடனம்” என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.., உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.., வெளியான அதிரடி தீர்ப்பு!!!
அதில் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும். இது போக இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன். தனி மாநிலம் கோரி உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அவர்களது பெற்றோருக்கு மாதம் ரூ.25,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.