மீண்டும் களமிறங்கும் நண்பர்கள் கூட்டணி… கசிந்தது படத்தின் டீசர் வெளியிட்டு தேதி!!!

0

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் உள்ளவர்கள் தான்  நம்மளோட அவன் – இவன் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா. இந்த நண்பர்களை   எனிமி  என்னும் படம் மீண்டும் இணைத்து உள்ளது. அந்த படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒரு ஜோடியாகவே அறியப்பட்டு வருகின்றனர். அதாவது, ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் நல்ல நண்பர்களாகவும் நல்ல நடிகர்களாகவும் உள்ளவர்கள் தான் நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா அவர்கள். இவர்கள் இருவரும் தனித்தனியாக பல படங்களில்  தங்களின் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இணைந்த படம் பாலா இயக்கத்தில் உருவான படம் தான் அவன் – இவன். இந்த படம் பாலா படத்திற்கே உரிய தோரணையிலும் இந்த நண்பர்களின் நடிப்பில் பட்டையை கிளப்பியது.

  

இந்நிலையில் இந்த பட்டைய கிளப்பும் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதாவது ஆனந்த் ஷங்கர் இயக்கி கொண்டு இருக்கும் எனிமி என்னும் படத்தில் தான் இந்த நண்பர்கள் இணைந்து உள்ளனர். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டீசர்  வருகின்ற ஜூன் 20-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இயக்கும் ஆனந்த் ஷங்கர் தமிழில் இதற்கு முன்பாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here