அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்…, நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??

0
அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்..., நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??
அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்..., நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??

ஆசிரியர் தேர்வு வாரியமானது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை, பணி அமர்த்துவதற்கான TNTET எனப்படும் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் இந்த தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு பணி என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன்படி, முதல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு முதல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், பணி நியமனத்திற்காக மேலும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த பணி நியமன தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

சொத்து விவரங்களை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!

இதற்கிடையில், “தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி” என்று தேர்தல் வாக்குறுதியாக, திமுக அறிவித்திருந்தது. ஆனால், இன்றளவும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், முதல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வழங்கப்படாமல் இருக்கும் 20 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டங்களை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்திற்கு முன் தொடர்ந்து 3 வது நாளாக நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here