TET தேர்வர்களே…, நியமன தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

0
TET தேர்வர்களே..., நியமன தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!
TET தேர்வர்களே..., நியமன தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி அமர்த்துவதற்காக பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல், பாலிடெக்னிக் ஆகிய தொழில் முறை கல்லூரிகளிலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், இடைநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு வாரியம் மே மாதத்திற்குள் அனைத்து போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் TNTET தேர்வு மட்டுமே கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அதற்கான முடிவுகளும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த தேர்வின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இது வரையிலும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வின் மூலம், கடந்த 2012, 2013-14 ஆம் கல்வி ஆண்டில் தான் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று வரையிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ME TOO வழக்கில் வைரமுத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் ஸ்டாலின்? சரமாரியாக கேள்வி எழுப்பிய சின்மயி!!

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே கல்வி தரத்தை உயர்த்த முடியும். எனவே, விரைவில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வை ரத்து செய்து, தகுதி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும், பகுதி நேர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவும் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் TNTRB தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தான் இந்த தாமதம். இந்த குறிப்பிட்ட வழக்குக்கான தீர்ப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது. தீர்ப்புகள் வெளியானதும் TNTRB மூலமாக 4000 பேராசிரியர்களை நியமனம் செய்ய உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here