TCS, Infosys, HCL போன்ற ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு? முக்கிய அறிவிப்பு!

0
TCS, Infosys, HCL போன்ற ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு? முக்கிய அறிவிப்பு!
TCS, Infosys, HCL போன்ற ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு? முக்கிய அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான TCS, Infosys, HCL போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியுடையவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பள உயர்வு:

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடெட் நிறுவனம், Infosys, HCL நிறுவனம் போன்ற நிறுவனங்கள் கொரோனா கால கட்டத்திற்கு பிறகே நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால், இந்த ஐடி நிறுவனங்கள் பல புதிய ஊழியர்களையும் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே TCS நிறுவனத்தில் 19.7 சதவீத ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அதே போல ஜூன் மாதத்தில் விப்ரோவின் அட்ரிஷன் விகிதம் 23.3 சதவீதமாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகளையும் வழங்குகின்றனர். இதனிடையே, Tata Consultancy Services (TCS), Wipro மற்றும் HCL Tech போன்ற நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதாவது, செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியுடையவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி நிறுவனங்களில் மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

மற்ற ஊழியர்கள் அனைவரும் தற்போது வரைக்குமே வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், சிலர் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே, இன்ஃபோசிஸ் நிறுவனம் நீண்ட காலத்திற்கு வேலை செய்யும் ஹைப்ரிட் மாதிரியை பின்பற்ற திட்டமிட்டுள்ளது. அதே போல, டிசிஎஸ் நிறுவனம் ஹாட் டெஸ்க்குகளையும் அவ்வப்போது இயக்க மண்டலங்களையும் (OOZs) அமைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here