
தமிழகத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களும் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிலம், சொத்து, கடன் உள்ளிட்டவைகளுக்கு அரசு கருவூலங்கள் மூலம் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. எனவே இதற்கான ஆவணமாக கருதப்படும் முத்திரைத்தாள்களை விற்பனை செய்ய சில நபர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்களுக்கான கமிஷன் தொகையையும் பத்திரத்தாளை கொடுக்கும் போதே அரசு வழங்கி விடுகிறது. இந்நிலையில் பத்திரப்பதிவுக்காக முத்திரைத்தாள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் குறிப்பிட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பத்திரப்பதிவு துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
ரேஷன் கார்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதையடுத்து இந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வழக்குகளில் பிடிபடுபவர்களின் உரிமங்களை ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.