டாட்டூவால் வாழ்க்கையை தொலைத்த மாடல் அழகி – ஒட்டுமொத்த கேரியரையும் இழந்து வாடும் சோகம்!

0
டாட்டூவால் வாழ்க்கையை தொலைத்த மாடல் அழகி - ஒட்டுமொத்த கேரியரையும் இழந்து வாடும் சோகம்!

உடல் முழுவதும் டாட்டூ போட்டு கொண்டதால் தன்னை மக்கள் புறக்கணிப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மாடல் அழகி:

தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் டாட்டூ போடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை சில பேர் விருப்பத்திற்காகவும் மற்றும் Passion-காகவும் செய்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 27 வயது ஆம்பர் லூக் என்ற மாடல் அழகி உடம்பு முழுவதும் கிட்டத்தட்ட 98 சதவீதம் டாட்டூ குத்தியுள்ளார்.

இதனால் Dragon Girl என ஆஸ்திரேலியாவில் அழைக்கப்படுகிறார். மேலும் இவர் உடம்பு முழுவதும் பச்சை குத்துவதற்கு இந்திய மதிப்பில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவழித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடம்பு முழுவதும் டாட்டூ போட்டு கொண்டதை நினைத்து வருந்துகின்றேன் என கூறியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, நான் விரும்பி போட்டு கொண்ட டாட்டூவால் வாழ்க்கையை மாறிப்போய்விட்டது, ஏனென்றால் உடம்பு முழுவதும் டாட்டூ காணப்படுவதால் மக்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் மற்றும் வேலை எங்கும் கிடைக்கவில்லை கூறியுள்ளார்.

மேலும் மக்கள் கூறும் சில கருத்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கின்றது. அதில் குறிப்பாக டாட்டூ போட்டுக்கொண்டு தன் தோற்றத்தை அழித்துவிட்டாள் என்று கூறும்போது வருத்தமளிக்கிறது. மேலும் நான் யாருக்கும் தீங்கு தரவில்லை, என்னுடைய விருப்பத்திற்கு இருப்பது தவறு இல்லை என்று ஆஸ்திரேலிய மாடல் அழகி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here