67 ஆண்டுகளுக்கு பிறகு.., ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் டாடா குழுமம்!!

0

கொரோனா நோய் தொற்று காரணமாக விமான சேவை முடக்கம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்ற உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் டாடா:

விமானப் போக்குவரத்தில் சீனாவிற்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு இந்திய விமானச் சந்தையின் வர்த்தகத்தையும் வளர்ச்சியும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முன்வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் முதல்முறையாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பெயரை 1946-ல் ஏர் இந்தியா என டாடா குழுமம் மாற்றியது. 1963-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. 1995-ல் விமான நிறுவனம் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிய 2001-ல் ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.

Ratan-Tata
Ratan-Tata

ஆனால் இந்த துறையில் இருந்து பின்வாங்காத டாடா குழுமம், 2013 முதல் ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா என 2 விமான நிறுவனங்களில் பங்குதாரராக இருந்து ஏர் இந்தியாவை வாங்க இருந்த திட்டம் தோல்வியில் முடிந்ததால் தற்போது தனியாக செயல்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தோனி இல்லையாம், விராட் கோஹ்லி தான் டாப்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் எடுக்கும் இந்த முதலீடு எதிர்காலத்தில் வர்த்தகத்தின் அளவை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here