தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக எல்லா இடங்களிலும் தீபாவளி பண்டிகை களை கட்டியது. ஒவ்வொருவரும் தீபாவளி பண்டிகையை நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக ஆண்கள் தங்களது பண்டிகையை அதிக மது பாட்டில்களை வாங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூபாய் 467 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூபாய் 246 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.