
சமீபத்தில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகள் மற்றும் பள்ளிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் உட்பட 500 கடைகளை தமிழக அரசு அதிரடியாக மூடியது. இதை தொடர்ந்து மது பிரியர்களுக்காக டாஸ்மாக் கடைகளில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாகவே சில்லரை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர் என்று புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தடுக்க அமைச்சர் முத்துசாமி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும் தொடர்ந்து இந்த புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பிடிபட்டால், அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து, ஏற்கனவே முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் அவர்களை , ‘டிஸ்மிஸ்’ செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த முறைகேடு நடக்காமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்தவர் காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழப்பு…, நிபா வைரஸ் தான் காரணமா?? வெளியான தகவல்!!