
தமிழ்நாட்டில் சுமார் 5329 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இப்படி இருக்கையில் அண்மையில் விழுப்புரம் அருகே உள்ள மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இன்னும் பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சில விஷயங்கள் அறிவுறுத்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது டாஸ்மாக் கடைகளை தவிர மற்ற எந்த இடத்திலும் மதுபானங்கள் விற்க கூடாது. அப்படி விற்கும் இடங்களை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். மேலும் வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.