மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு – அரசாங்கம் தீவிர ஆலோசனை!!

0
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் - டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு - அரசாங்கம் தீவிர ஆலோசனை!!
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் - டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு - அரசாங்கம் தீவிர ஆலோசனை!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 5329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி, தகுதியான 500 டாஸ்மாக் கடைகளை, மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று அதிரடியாக மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து அண்மையில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி இன்னும் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை காரணம் காட்டி எதிர்கட்சிகள் பல விதங்களில் போராட்டம் நடத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது மட்டுமின்றி மதுபான கடையின் நேரம் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை., வெள்ளப்பெருக்கு அபாயம்?? வானிலை மையம் தகவல்!!!

அதன்படி தற்போது மதுபான கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் நிலையில் இனிமேல் மதியம் 1 மணிக்கு திறக்கபடலாமா?? என்றும், அதே போல் இரவு 10 மணிக்கு மூடப்படும் கடைகள், இனி இரவு 9 மணிக்கு மூடலாமா?? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் நடந்த மறைந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் டாஸ்மாக் கடையின் நேரம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here