கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக் – வெளியான பரபரப்பு தகவல்!!

0
மாநிலம் முழுவதும் மது விற்பனை அமோகம் - வெறும் 5 நாட்களில் கோடி கணக்கில் கல்லா கட்டிய அரசு!!

கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக், பல லட்சம் கோடியில் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக்:

தமிழகத்தில் அரசுக்கு வருவாய் வழங்கும் துறையில் முக்கியமான இடத்தை பெறுவது டாஸ்மாக் தான். இங்கு விற்பனையாகும் சரக்குகளின் எண்ணிக்கையால் தான் பொருளாதாரம் மேம்பட்டதாக மதுபிரியர்கள் அடிக்கடி காமெடியாக தெரிவிப்பது உண்டு. அது போல, திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் இந்த டாஸ்மாக் துறை பல லட்சம் கோடிகளில் கல்லா கட்டி விடும் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த துறை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக் - வெளியான பரபரப்பு தகவல்!!
கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக் – வெளியான பரபரப்பு தகவல்!!

இந்நிலையில், இந்த டாஸ்மாக் விற்பனை குறித்த தகவல்கள் வேண்டும் என்று சென்னையை சார்ந்த காசிமாயன் என்பவர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக்கின் ஒட்டு மொத்த வருமானமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறை பெருத்த நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக் - வெளியான பரபரப்பு தகவல்!!
கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக் – வெளியான பரபரப்பு தகவல்!!

அதாவது, கடந்த 2010- 2011 ஆண்டுக்கான வருவாயில் 3.56 கோடியும், 2011-2012 ம் ஆண்டில் 1.12 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், 2012-2013 ம் 103.64 கோடியாகவும், 2013-2014ம் ஆண்டில் 64.44 கோடியாக நஷ்டம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது போக, கடந்த ஆண்டில், அதாவது 2019-2020 ஆண்டிலும் 64.44 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. வருவாய் அதிகம் வரும் துறை என அறியப்பட்ட துறையில், ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய இழப்பு அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here