தமன்னா மீது மாஸ்டர் செப் நிகழ்ச்சி வழக்கு பதிவு – என்ன காரணம் தெரியுமா?

0

இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். தமிழில் இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதே சமயம் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கினார்.

ஆனால் சில காரணங்களால் சில நாட்களிலேயே தமன்னாவை நீக்கிவிட்டு அந்நிகழ்ச்சி குழு வேறு ஒருவரை தொகுப்பாளர் ஆக்கியது. இதை தொடர்ந்து தமன்னா தன்னை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியது சரியில்லை என்றும், மேலும் தனக்கு பேமண்ட் தொகை பாக்கி உள்ளது என கூறி  நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதை எதிர்த்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் நாங்கள் 18 நாட்கள் தமன்னாவின் கால்ஷீட் வாங்கினோம். அதற்கு பேமண்ட்டாக ரூ.2 கோடி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் தமன்னா 16 நாட்கள் மட்டுமே வந்தார். இருப்பினும் நாங்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் ரூபாய்யை சம்பளமாக கொடுத்து விட்டோம்.

உரிய நேரத்தில் தமன்னா ஷூட்டிங்கிற்கு வராததால் எங்களுக்கு தான் 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் தமன்னா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here