தமிழும் சரஸ்வதி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம்… வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் கடந்த மாதம் முதல் புதுவரவாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதி. இந்த சீரியலில் சரஸ்வதியாக, நட்சத்திரா தனது பிறந்த நாளை அந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி உள்ளார். அந்த பிறந்த நாள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதி சீரியலின் கருப்பொருளாக, படிக்காத ஆனால் மிக பொறுப்பாக தன்னுடைய குடும்பம் மற்றும் தொழிலையும் கவனித்து கொள்ளும் கதையின் நாயகன் தமிழ். படிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தனது சொந்த மாமா பெண்ணே அவரை  திருமணம் செய்ய மறுக்கிறார். இந்நிலையில்  தமிழின் அம்மா தமிழுக்கு எப்படியாவது நன்கு படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சவால் விடுகிறார்.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பையே பல அட்டெம்ப்ட் செய்தும் தேர்ச்சி பெறாததால் தன் அப்பாவின் பாசத்தை இழந்து குடும்பத்தால் ஏளனமாக பார்க்கப்படும்  கதையின் நாயகி சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நட்சத்திரா. எதிர்பாராத விதமாக சந்திக்கும் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு இடையில் காதல் மலர்கிறது. இவர்களின் காதல் கைகூடுமா? அப்படியே திருமணத்தில் முடிந்தாலும் இவர்கள் இருவரும் அதன் பின்னர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை என்ன என்ன என்பதே இந்த சீரியலின் மீதி கதை.

இந்நிலையில் இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வரும் நட்சத்திரா தன்னுடைய பிறந்த நாளை  தமிழும் சரஸ்வதி ஷூட்டிங் செட்டில் கொண்டாடி உள்ளார். இதையடுத்து இந்த சீரியலின் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்று கூட கேக் கட் பண்ணி மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here