தமிழும் சரஸ்வதியும் சீரியல் அப்டேட்-கார்த்திக்கிற்கு வேறு பெண் பார்ப்பது தெரிந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் வசுந்தரா!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கார்த்திக்கிற்கு வேறு ஒரு பெண் பார்ப்பதால் தனக்கு அவர்  கிடைக்க மாட்டான் என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் வசுந்தரா.

தமிழும் சரஸ்வதியும் :

தீபக் கதாநாயகனாக தமிழ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியல் கதையின் நாயகன் தமிழின் தம்பி கார்த்திக் அவர்களின் திருமணம் தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது கார்த்திக் அம்மா கோதைக்கும் வசுந்தரா அம்மா சந்திரகலாவுக்கும் இடையே ஒரு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கோதை தன்  மகனுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்குகிறார்.இதனால் கார்த்திக் மற்றும் வசுந்தரா இவர்களின் திருமணம் நடைபெறுமா என்பது குறித்த சந்தேகம் நிலவி வருகிறது.

 

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், கார்த்திக் தனக்கு கிடைக்க மாட்டான் என்ற எண்ணத்தில் விரக்தியுடன் தன்னுடைய அறைக்கு சென்று கதவை மூடி கொள்கிறார் வசுந்தரா. மேலும் அவரை பின் தொடர்ந்து வந்த சந்திரகலா எவ்வளவு தட்டியும் கதை திறக்காத வசுந்தரா கையில் கத்தியை எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.

இதனால் சந்திர கலா மிகுந்த பரபரப்புடன் கதவை திறக்க சொல்லி வெளியே நின்று கூச்சலிடுகிறார். இன்னொரு புறம் கோவிலில் தமிழும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்க்கின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here