தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று (பிப்.7) பேச்சுவார்த்தை., முழு விவரம் உள்ளே…

0

தமிழகத்தில் அண்மைக்காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து தொழிலாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதில் 15 வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் 3ம் கட்டமாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று (பிப்.7) பிற்பகல் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் 27 தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மேலாண் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் மகளிருக்கு போல, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here