ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவைகள் ரத்து – முழு விவரங்கள் இதோ!!

0
ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவைகள் ரத்து - முழு விவரங்கள் இதோ!!

தமிழகத்தில் குறிப்பிட்ட சில ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரைக்கும் சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதற்கான முழு விபரங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை

பேருந்து போக்குவரத்தை விட ரயில்களில் தான் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலரும் ரயிலில்தான் பயணம் செய்ய விரும்புகின்றன. மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அப்போது ரயில் தண்டவாளங்களில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதா எனவும், பழுதுகள் உள்ளதா எனவும் சரிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் மானாமதுர முதல் மேல கொன்னகுளம், திண்டுக்கல் முதல் அம்பாத்துரை, ராஜபாளையம முதல் சங்கரன்கோவில், சூடியூர முதல் பரமக்குடி இடையிலான ரயில் தண்டவாளங்களில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில முக்கிய ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ராமேஸ்வரம் முதல் மதுரை செல்லும் ரயில் நாளை முதல் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் வியாழன் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு கிளம்பும் எனவும், மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு கிளம்புவதற்குப் பதிலாக 1:10 மணிக்கு கிளம்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி முதல் மானாமதுரை இடையிலான ரயில் சேவைகள் வரும் 17ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரைக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில்கள் வழக்கம்போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், திண்டுக்கல் – அம்பத்தூர் பகுதிகளில் நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரைக்கும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் 90 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை – குருவாயூர் விரைவு ரயில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாக இயங்கும் எனவும், வெள்ளிக்கிழமையில் 95 நிமிடம் தாமதமாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜபாளையம் – சங்கரன்கோவில் பகுதிகளில் ரயில் பாலத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரைக்கும் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவில்பட்டியில் வரும் செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில்களில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குமாரபுரம் பகுதிகளில் வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்காசி முதல் செங்கோட்டை வழியாக செல்லும் ரயில் பாதைகளில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் மற்றும் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here