தமிழக சபாயநாயகராக கு.பிச்சாண்டி தற்காலிகமாக நியமனம் – ஆளுநர் முன் இன்று பதவியேற்றார்!!!

0
தமிழக சபாயநாயகராக கு.பிச்சாண்டி தற்காலிகமாக நியமனம் - ஆளுநர் முன் இன்று பதவியேற்றார்!!!
தமிழக சபாயநாயகராக கு.பிச்சாண்டி தற்காலிகமாக நியமனம் - ஆளுநர் முன் இன்று பதவியேற்றார்!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கட்சி 10 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி பதவி ஏற்றார் அவருடன் சேர்ந்து தமிழக அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.அதேபோல் வரும் மே 11ம் தேதி செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

தமிழகத்தின் தற்காலிக சபாநாயகர்…

ஏப்ரல் 6 2021 தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியிடப்பட்டது.அதில் மு க ஸ்டாலின் தலைமையிலான அணி வெற்றி பெற்று.10 ஆண்டுகளுக்கு பின் தி மு க தமிழத்தில் ஆட்சியை பிடித்தது.கொரோன நோய் தொற்று காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது அதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை தமிழக ஆளுநர் முன் 33 அமைச்சர்களும் மே 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.தலைமை செயலத்தில் நேற்று மே 9ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அதன் பின் நாளை காலை சட்டமன்ற கூட்டடதொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தமிழக சபாயநாயகராக கு.பிச்சாண்டி தற்காலிகமாக நியமனம்
தமிழக சபாயநாயகராக கு.பிச்சாண்டி தற்காலிகமாக நியமனம்

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் தேவை என்பதால் தற்காலிக சபாநாயகரை கு.பிச்சாண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மிழக தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சகர்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.நாலா நடைபெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி

யார் இந்த கு.பிச்சாண்டி??

கு.பிச்சாண்டி திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் ஆவர் இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்.இவர் இதுவரை 9 முறை சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று 6 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்ததார்.தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார்.நாளை மறுநாள் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்துடுக்க திட்டமிட்டுள்ளனர். கு.பிச்சாண்டி அல்லது ராதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here