10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!!

0
10 th exams results
10 th exams results

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை வெளியிடப்பட்டது. இதில் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதால் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

10ம் வகுப்பு ரிசல்ட்:

தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு மாணவர்கள் நலன்கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளை கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

public exams
public exams

மாணவர்கள் www.tnresults.nic.in., www.dge1.tn.nic.in., www.dge2.tn.nic.in., ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கும் மதிப்பெண் விபரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 4,68,070 மாணவிகள், 4,71,759 மாணவர்கள் என மொத்தமாக 9,38,829 பேர்க்கு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் 7,368 மேல்நிலை பள்ளிகள். 5,322 உயர் நிலை பள்ளிகள். 6,235 மாற்றுத்திறனாளி பள்ளி மாண்வர்கள் அடங்குவர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இம்முறை மதிப்பெண் மறுகூட்டல் கிடையாது என்பதால், ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here