தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புகழ்பெற்ற வைணவ கோவில் தளங்கள் உள்ளது. இதற்கு சென்று வர பல பக்தர்களும் ஆர்வம் காட்டி வருவதால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை “ஆன்மீக சுற்றுலா” அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திவ்ய தேசப் பெருமாள் கோவில்களுக்கு, பக்தர்களை மிகக் குறைந்த கட்டணத்தில் ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர். இது தொடர்பான கூடுதல் விபரங்கள் www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்தில் விரைவில் தெரியப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆத்தாடி., ”கலாப காதலன்” படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!!