தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் – வணிகர் சங்கம் அறிவிப்பு!!

0

சென்னையில் கொரோனா பாதிப்பால் அடைக்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்கக்கோரி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா அறிவித்து உள்ளார்.

கடை அடைப்பு போராட்டம்:

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த முக்கிய இடங்களில் ஒன்று கோயம்பேடு காய்கறி சந்தை. இதனால் மாநகராட்சி சார்பில் கோயம்பேடு சந்தை அடைக்கப்பட்டு வேறு ஒரு இடத்திற்கு வியாபாரம் மாற்றப்பட்டது. இதனை மீண்டும் திறக்கக்கோரி வியாபாரிகள் கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற வணிகர் சங்க பேரவை கூட்டத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பிற மாவட்டங்களில் அடைக்கப்பட்டு உள்ள சந்தைகளை மீண்டும் திறக்கக்கோரி ஆகஸ்ட் 10ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி, பழம் மற்றும் பூ சந்தைகள் அடைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – ஊரடங்கு எதிரொலி!!

இந்த அடையாள போராட்டத்திற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வணிகர்கள் தொடர்ந்து போராட்டக் களத்தில் இறங்குவர் என விக்கிரம ராஜா எச்சரித்து உள்ளார். தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ள சந்தைகளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மற்றும் மழையால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாவதாக அவர் கூறியுள்ளார். மேலும் சந்தைகளை மீண்டும் திறந்தால் தேவையான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவர் என அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here