தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் கொரோனா பாதிப்பு காரணமாக திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உளள்து.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Minister Sengottaiyan
Minister Sengottaiyan

இன்னும் தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பின்னரே முடிவு வெளியிடப்படும். அதற்கு போக்குவரத்திற்கு பேருந்துகள் இயக்கம் வேண்டும். ஆனால் அது தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என கூறினார். தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்!!

மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து துறையினர் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முதல்வர் அவர்கள் முடிவெடுப்பார். நிலைமை சரியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். எனவே தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை, நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here