பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை அறிவித்த தமிழக அரசு – முழு விவரங்கள் உள்ளே!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்! கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் அறிவிப்பு:

தமிழகத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்த கல்வி உதவித்தொகையை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆகியோர் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த கல்வி உதவித்தொகை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, கல்வி இடைநிலை தடுப்பதற்காகவும்  அரசின் சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகையும், 10ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையும் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதியான மாணவர்கள், இணையத்தில் இருந்து விண்ணப்பம் பெற்று கல்வி சான்றிதழ்,வருமான வரி சான்றிதழ், பாஸ் புக் புத்தகத்தின் நகல் மற்றும் ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் பிப்ரவரி 10க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here