மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!

0
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!

மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லி வற்புறுத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

கட்டாய படுத்த வேண்டாம்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து மாநில அரசின் தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பின் தொற்று பரவல் கொஞ்சம் குறைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!! 

மேலும், பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பள்ளிகள் திரும்பவும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பரபரப்பு பேட்டி!!

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கும், மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவர்கள் இதற்கு முன்பே தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும், தற்போது நடந்த சோதனையில் அது தெரிய வந்திருப்பதாகவும் அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும், இது குறித்து பேசியுள்ள, பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை எனவும், அவர்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here